குதம்பை சித்தர் பாடல்
குதம்பை சித்தர் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர் . குதம்பை சித்தர் பாடல் பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக் காரணம் இல்லையடி குதம்பாய் காரணம் இல்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச் சாங்காலம் இல்லையடி குதம்பாய் சாங்காலம் இல்லையடி. செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லையடி குதம்பாய் முத்திதான் இல்ல...