சகல சங்கடங்களையும் தீர்க்கும் 108 சாய் பாபா போற்றி
சகல சங்கடங்களையும் தீர்க்கும் 108 சாய் பாபா போற்றி
கீழ்க்காணும் சாய் பாபா மந்திரத்தை வியாழக்கிழமை 108 முறை கூறி வந்தால் சாய் பாபாவின் அருளும் ஆசியும் கிட்டும்.தினமும் ஓதலாம் , வியாழக்கிழமைகளில் ஓதுவது சிறப்பு.
சீலங்கள் தருவாய் போற்றி
ஞாலத்தின் ஒளியே போற்றி
நலம்தந்து அருள்வாய் போற்றி
நான்மறைப் பொருளே போற்றி
ஞானத்தின் ஒளியே போற்றி
கற்பக விருட்சம் போற்றி
கற்பூர ஒளியே போற்றி
துளசியாய் இருப்பாய் போற்றி
துயரங்கள் துடைப்பாய் போற்றி
துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி
துணைநின்று காப்பாய் போற்றி
பாபங்கள் தீர்ப்பாய் போற்றி
பலன்களை அருள்வாய் போற்றி
கிருஷ்ணனும் நீயே போற்றி
பரமனும் நீயே போற்றி-
சிவனும் நீயே போற்றி
தத்தாத்ரேயராய் வந்தாய் போற்றி
பாற்கடல் நீயே போற்றி
பசுமையும் நீயே போற்றி
சலனங்கள் தீர்ப்பாய் போற்றி
சங்கடம் தீர்ப்பாய் போற்றி
உலகெல்லாம் நீயே போற்றி
உன்னதத் தெய்வம் போற்றி
வீரத்தை தருவாய் போற்றி
வெற்றிகள் அருள்வாய் போற்றி
பசிப்பிணி தீர்ப்பாய் போற்றி
பக்குவம் அருள்வாய் போற்றி
நலம்தந்து காப்பாய் போற்றி
நன்மையின் உருவே போற்றி
வழிகாட்டி அருள்வாய் போற்றி
வழித்துணை ஆவாய் போற்றி
புகழ்தந்து காப்பாய் போற்றி
புண்ணிய நேசா போற்றி
கருணையின் உருவே போற்றி
கலிகளைத் தீர்ப்பாய் போற்றி
அதர்மங்கள் அழிப்பாய் போற்றி
அறங்களை வளர்ப்பாய் போற்றி
நற்குணத் தெய்வம் போற்றி
நலம்பல தருவாய் போற்றி
காண்பதற்கு எளியாய் போற்றி
கனிவுடன் வருவாய் போற்றி
எல்லையில்லாப் பரம்பொருள் போற்றி
இல்லத்திற்கு வந்தருள்வாய் போற்றி
அரிதினும் அரிதாய் இருப்பாய் போற்றி
எளிதினும் எளிதாய் வருவாய் போற்றி
பொன்மலர் மணமே போற்றி
பொன்மனத் தெய்வம் போற்றி
வண்ணங்கள் நீயே போற்றி
வளர்கலை நீயே போற்றி
எண்ணங்கள் நீயே போற்றி
இதயமும் நீயே போற்றி
வானவர்க்கு அரசே போற்றி
வையத்தின் தெய்வம் போற்றி
கவிகளும் நீயே போற்றி
காவியம் ஆவாய் போற்றி
எளியவர்க்கு தாயே போற்றி
இனிமையாய் காப்பாய் போற்றி
தவறுகள் தடுப்பாய் போற்றி
தகுதிகள் தருவாய் போற்றி
வேதனை தீர்ப்பாய் போற்றி
வித்தகத்தேவா போற்றி
நன்மையின் உருவே போற்றி
நலம்தந்து அருள்வாய் போற்றி
சங்கடம் தீர்ப்பாய் போற்றி
சமரசத் தெய்வம் போற்றி
அனுதினம் துதிப்போம் போற்றி
ஆனந்தம் தருவாய் போற்றி
துன்பங்கள் தீர்ப்பாய் போற்றி
துணிவைத் தருவாய் போற்றி
வேண்டுவன தருவாய் போற்றி
விரைந்து வந்து அருள்வாய் போற்றி
மோகத்தை அழிப்பாய் போற்றி
முன்வந்து காப்பாய் போற்றி
நினைத்ததை தருவாய் போற்றி
நிம்மதி அருள்வாய் போற்றி
மகிழ்ந்திட வருவாய் போற்றி
மங்கலம் தருவாய் போற்றி
எளியவர்க்கு அருள்வாய் போற்றி
இனியவரை காப்பாய் போற்றி
அனுதினம் துதிப்போம் போற்றி
அருள்நெறி காப்பாய் போற்றி
மலர்ப்பாதம் உடையாய் போற்றி
மனங்கனிந்து அருள்வாய் போற்றி
நற்குண நாதா போற்றி
நலம் தந்து காப்பாய் போற்றி
குங்கும நிறத்தாய் போற்றி
குலம்காக்க வருவாய் போற்றி
சந்தன மலராய் போற்றி
சந்ததம் காப்பாய் போற்றி
பொன்மனத் தெய்வம் போற்றி
புகழ்தந்து அருள்வாய் போற்றி
நதிஎன வந்தாய் போற்றி
நலம்தந்து அருள்வாய் போற்றி
கவலைகள் தீர்ப்பாய் போற்றி
கலங்கரை விளங்கே போற்றி
கீதையாய் வந்தாய் போற்றி
கீதங்கள் நீயே போற்றி
பக்தி கொண்டோம் போற்றி
பரவசம் தந்தாய் போற்றி
நாமங்கள் சொல்வோம் போற்றி
நற்துணை ஆவாய் போற்றி
வந்தனை செய்தோம் போற்றி
வரம்தந்து அருள்வாய் போற்றி
ஓம்காரப் பொருளே போற்றி
உடன்வந்து அருள்வாய் போற்றி
சாயி ஜோதியே போற்றி
சகலமும் அருள்வாய்
ஓம் சாய் ராம் ! ஓம் சாய் ராம் ! ஓம் சாய் ராம் ! ஓம் சாய் ராம் !
#Saibaba #Shirdi #சாய்
Comments
Post a Comment