புரட்டாசி மாதம்

 புரட்டாசி மாதம் எப்படி பெருமாளுக்கு உகந்தது? 


சாஸ்திரம் சம்பிரதாயம் போன்றவற்றை வழி வழியாக கடைப்பிடித்து வரும் நாம் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வதும் அதை மற்றவரும் அறியும் வண்ணம் எடுத்துரைப்பதும் ஒரு வகை புண்ணியமே . அந்த வகையில் புரட்டாசி எப்படி பெருமாளுக்கு உகந்தது என்பதை பார்ப்போம் .


                                                                            



புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சியாகிறார் . மற்ற ராசிகளை காட்டிலும் கன்னி ராசிக்கு ஒரு தனித்தன்மை உண்டு . ஒரு கிரகம் ஒரு ராசியில் ஆட்சியையும் இன்னொரு ராசியில் உச்சமும் உச்சம் அடைந்த இடத்தில் இருந்து ஏழாவது ராசியில் நீச்சமும் அடையும் . உதாரணத்துக்கு சிம்மத்தில் ஆட்சி பெரும் சூரியன் , மேஷத்தில் உச்சமும் துலாமில் நீச்சமும் பெறுவார். ஆக - ஆட்சி பெறுவது ஒரு ராசியிலும் , உச்சம்/நீச்சம் பெறுவது இன்னொரு ராசியிலும் உண்டாகும் ஆனால் கன்னி ராசியில் மட்டும் தான் புதன் ஆட்சியும் / உச்சமும் பெறுகிறார் . இது வேறு எந்த ராசியிலும் இப்படிப்பட்ட விசேஷம் இல்லை . புதனுக்கு அதிதேவதை மஹாவிஷ்ணு . எனவே சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலமாகிய புரட்டாசியில் புதனுக்கு அதிதேவதையான மஹாவிஷ்ணுவை வணங்கும் முறை வந்தது . ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. 

        

                                                                       

புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. மற்றுமொரு சிறப்பம்சமாக புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார் . எனவே சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும் .
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் அல்லவை நீங்கி நல்லவை சேரும், வளமான வாழ்வு வசப்படும் தடைகள் அகன்று சர்வமங்களம் அமையும் என்பது நிதர்சனம் .


                                                                                     


                   


பின்குறிப்பு :

தினமும் கோடிக்கணக்கில் உண்டியல் வசூல் செய்யும் ஏழுமலையானுக்கு தொண்டைமான் காலத்தில் இருந்து இன்று வரை மண் சட்டியில் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது . ஆனால் ஒரு காலத்தில் கஷ்டஜீவனம் செய்த பலர் இன்று இறைஅருள் மூலம் உயர்வு பெற்றாலும் அன்று இருந்த எளிமை இன்று அவர்களிடம் மாறிப்போனது பரிதாபமே !!!!


புரட்டாசி மாத துவக்கத்தை முன்னிட்டு நாளை முதல் யாசகம் / அன்னதானம் பெற சமூகம் செல்ல இருப்பதால் ஜோதிட / ஆன்மீக பதிவுகள் பதிவிடப்படுவது சற்று தாமதப்படும் என்பதை சமூகம் இங்கே தெரிவிக்கிறது.


Blogs by PlipPlipBlogs

Comments

Popular posts from this blog

புத்தரின் போதனைகள்

SaiBaba - சாயிபாபா பொன்மொழிகள்

The Amazon Forest - South America