புரட்டாசியின் பெருமை அறிய படிக்கவும்
புரட்டாசியின் பெருமை
துன்பங்கள் விலகவும் எம பயம் நீங்கவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பாகும்.ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் பிடிப்பது நல்லது. அவ்வாறு விரதம் கடைபிடித்து சனி பகவானுக்கு நீல மலர்கள் அணிவித்து எள் விளக்கு ஏற்றி அவனிடம் சரண் அடைந்தால் அவர் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார் நம்மைகள் பல செய்வார்.
கன்யா மதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று சனி பகவான் பிறந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. புரட்டாசி பௌர்ணமி அன்று சிவனை காலை வழிபாடு செய்தால் முற்பிறவி பாவங்கள் அகலும். மதியம் வழிபாடு செய்தால் இப்பிறவி பாவங்கள் ஒழியும். தினந்தோறும் வழிபாட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும்
சனிக்கிழமையில் ஓத வேண்டிய மந்திரங்கள் :
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ வெங்கடேசாய
ஓம் நமோ மகா விஷ்ணு
விஷ்ணுவின் அருள் அனைவர்க்கும் கிட்டட்டும்.
By PlipPlipBlogs
Comments
Post a Comment