புத்தரின் போதனைகள்
புத்தரின் போதனைகள்
புத்தரின் போதனைகளில் சில துளிகள் :
முதலில் ஒழுக்கமாக வாழ வேண்டியதற்கு கடை பிடிக்கப்பட வேண்டிய போதனைகள், பஞ்ச சீலங்கள் அல்லது ஐந்து நல்லொழுக்கங்கள் :
1. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
2.திருட்டை தவிர்த்தல்
3.விபச்சாரத்தை தவிர்த்தல் ( தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடுவது)
4.பொய் பேசாது இருத்தல்
5.போதை பொருள்களைத் தவிர்த்தல் .
எட்டுவகை மார்க்கங்கள் :
- 1.நல்ல எண்ணம்
- 2.நல்ல நம்பிக்கை
- 3.நல்ல பேச்சு
- 4.நல்ல செயல்
- 5.நல்ல வாழ்க்கை
- 6.நல்ல முயற்சி
- 7.நல்ல சிந்தனை
- 8.நல்ல நோக்கம்
உலகத்தில் மகிழ்ச்சி அடைவதற்கு நான்கு விஷயங்கள் உள்ளன.அவை,
ஒரு மனிதனானவன் திறமை வாய்ந்தவனாகவும், குந்த சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.தர்மமான வழியில் தான் சம்பாதித்த பணத்தை அவன் நன்கு நெற்றியில் வியர்வை சிந்த அதைப் பாதுகாக்க வேண்டும்.
ஒருவன் நல்ல நண்பர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். நல்ல விசுவாசமான, நல்லகாரியங்களைச் செய்யும், தாராள மனதைக் கொண்டிருக்கும் புத்தி கூர்மை மிக்க நண்பர்களை அவன் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒருவன் தனது வருவாய்க்குத் தக்க அதிகமாகவும் செலவழிக்கக் கூடாது; குறைவாகவும் செலவழிக்கக் கூடாது.
பேராசையுடன் செல்வத்தைச் சேமித்து வைக்கக் கூடாது; ஊதாரியாக இஷ்டப்படி செலவழிக்கவும் கூடாது. அதாவது தன் வருவாய்க்குத் தக்க விதத்தில் வாழ வேண்டும்.
இதன் படி நடந்தால் சந்தோஷமே நீடித்து நிலைக்கும்.
புத்தரின் அருளுரை மனித குலத்தில் சந்தோஷம் அடைய விரும்பும் அனைவருக்காகவுமே உபதேசிக்கப்பட்டது.
சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு சாமானியனுக்கு இந்த உலகத்தில் நான்கு விதமான சுகங்கள் உள்ளன.
1.ஆர்த்தி சுகம்.
நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பொருளாதாரரீதியில் கஷ்டமில்லாமல் பணம் இருக்கும்பாதுகாப்பினால் வரும் சுகம்.
2.போக சுகம்
தான் சம்பாதித்த பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்காகவும் அத்துடன் பல நல்ல காரியங்களுக்காகவும் செலவழிப்பதனால் வரும் சுகம் போக சுகம் ஆகும்.
3. அனான சுகம்.
எந்த வித கடனும் இல்லாமல் கடன் தொல்லையின்றி இருப்பது அனான சுகம்.
4.அனாவஜ்ஜ சுகம்.
ஒரு வித தப்பும் இல்லாத, எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தீமையைக் கொண்டிராத, தூய்மையான வாழ்க்கையை வாழ்வதினால் வரும் சுகம் அனாவஜ்ஜ சுகம்.
புத்தரின் போதனைகளை கைக்கொண்டு வாழ்வில் வளம் பெறுவோம்.நமோ புத்தாய !!!
Comments
Post a Comment