செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்

செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்


நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமாக பக்தர்களால் போற்றப்படும் வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் தோஷத்தை நீக்கும் புண்ய ஸ்தலமாகும்.






இது செவ்வாய் கிரகத்துடன்  தொடர்புடைய நவகிரக கோயில்களில் ஒன்றாகும்.இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் பெரிய உறைகள் உள்ளன. வைதீஸ்வரன் பகவான் உள் கருவறையில் சிவலிங்கமாக உள்ளது.தேவாரம் பாடப்பெற்ற சமயத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டது. இன்று வைத்தீஸ்வரன் கோவில் என்றும் விளங்கும் இத்திருக்கோயில் காவிரி ஆற்றின்  வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்புபெற்ற ஒரு திருத்தலமாகும். பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன் மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழுதால் எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை .


நடை திறப்பு :

காலை : 5.30 முதல்  - பகல் 1 மணி வரை 

மாலை : 4 மணி முதல் இரவு 9 மணி வரை 


பயணம் :

சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை சீர்காழி கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. இத்திருத்தலம் சென்னையிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 


பல்வேறு நோய்கள் கொதிப்பு பருக்கள் மற்றும் வடுக்கள் ஆகியவற்றிலிருந்து தீர்வு காண மக்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் கோவிலில் இருந்து சிறப்பு எண்ணெயைப் பெற்று உடலில் தடவுகிறார்கள். தன்வந்த்ரி சித்தர் சமாதி அடைந்த இடம் இது. இந்த கிராமம் தமிழில் நாடி ஜோதிடம் என்று அழைக்கப்படும் பனை ஓலை ஜோதிடத்திற்கும் பெயர் 


வைத்தியநாதரை வணங்கி நோய்நொடி இன்றி சகல சந்தோஷங்களுடன் வாழ்வோமாக !

வைத்தீஸ்வரன்கோவில் #PlipPlipBlogs

Comments

Popular posts from this blog

புத்தரின் போதனைகள்

SaiBaba - சாயிபாபா பொன்மொழிகள்

The Amazon Forest - South America