Guru Nanak Dev Ji - குரு நானக் தேவ்

குரு நானக் தேவ்





சிறப்பு மிக்க சீக்கிய மதத்தைப் பற்றி  முன்னாடி ஒரு ப்ளாக்ல பாத்தோம். அதன் தொடர்ச்சியாக அதன் ஸ்தாபகர்  குரு நானக் தேவ் பற்றி  இதுல பார்ப்போம் 


 சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நாங்க தேவ் 15 ஏப்ரல் 1469 ல் இன்றைய பாகிஸ்தானில் தல்வாண்டி எனும் ஊரில் பிறந்தார்.அவரின் தாயமொழி பஞ்சாபி. இவரே சீக்கிய மதத்தில் முதல் குரு ஆவார். அவர்கள்.குரு நானக்கை பற்றிய வழக்கை குறிப்புக்கள் ஜனம்சாக்கிஸ் எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது  அவர் இளமை காலம் முதலே கடவுள், மதம், சகா மனிதர்களிடம் அன்பு ஆகியவற்றை பற்றி அதிகம் சிந்தித்து அதை ஆராயத்தொடங்கினார்.சனாதன மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உண்மையான ஓர் இறைவன் னுண்டு அவனை தெரிந்து கொள்ள வேண்டும் என தன முயற்சியை தொடங்கினார். 


 குரு நானக் தேவ் உலகம்  முழுவதும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது, கடவுளின் (ੴ, 'ஒரே கடவுள்') செய்தியை அவர் கற்பிக்கிறார், அவர் தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ஒளிந்துகொண்டு நித்திய சத்தியத்தை உருவாக்குகிறார். உடாஸிஸ் எனப்படும் உலகின் நான்கு திசை நோக்கி பயணம் மேற்கொண்டு அணைத்து மதத்தையும் பற்றியும் அறிகிறார் ஏக இறைவன் ஒருவனே அவனே அனைத்திற்கும் மூலாதாரம் அவனின்றி ஓர் அணுவும் அசையாது நாம் அனைவரும் அவனின் பிள்ளைகள் எனக் கண்டுகொண்டார். சர்வவல்லமையுள்ள , உருவமற்ற, அழிவில்லாத அனைத்து மதங்களிலும் குறிப்பிடப்படும் இறைவன் ஒருவரே.அவரே வாஹிகுரு என்று போதித்தார் .


 குரு நான்கின் மூன்று முக்கிய போதைகள் என்ன வென்றால் "வண்ட்க்கே சக்கோ ", "கீரத் கரோ" மற்றும் "நாம் ஜப்போ". வண்ட்க்கே சக்கோ என்றால் பிறருக்கு உதவுவது. கீரத் கரோ என்பது நேர்மையாக பணம் சம்பாரிப்பது. "நாம் ஜப்னா" என்பது ஏக இறைவன் வஹீகுரு வை பற்றி நினைத்து த்யானம் செய்வது.




இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும் குரு நானக் கூறிய வார்த்தைகள் , தாம் இந்துவோ, முஸ்லீமோ அல்ல என்றும். "கடவுள் இந்து மதமோ முஸ்லீம் மதமோ அல்ல " கடவுள் மதத்திற்கு அப்பாற்பட்டவர் .நான் கடவுளின் பாதையை பின் பற்றுகிறேன். ஏனெனில் கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை என்கிறார்.


 குரு நானக் தேவ்,கடவுளின் பெயரால் செய்யப்படும் வழிபாட்டுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்தார், மக்களையும் அப்படி செய்ய வழி காட்டினர். ஒரு மனிதன், ஞானம் பெற்ற குருவின் வழிக்காட்டுதலின் படி நடக்க வேண்டும் என்று போதித்தார்.அவர் 22 செப்டம்பர் 1539-ல் தன்னுடைய 70 ஆம் அகவையில் அந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுடன் இணைந்தார்.


By PlipPlipBlogs


 

Comments

Popular posts from this blog

புத்தரின் போதனைகள்

SaiBaba - சாயிபாபா பொன்மொழிகள்

The Amazon Forest - South America