மாத சிவராத்திரி
சிவராத்திரி
வணக்கம் மக்களே !! இன்னைக்கு(15-அக்-2020) சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள்,மாத சிவராத்திரி.
மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் சிவனாரை வழிபடும் சிறப்பானது நாள். இந்நாளில் சிவனை வழிப்பட்டால் சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.
மாதந்தோறும் முருக பெருமானுக்கு சஷ்டி போல,பெருமாளுக்கு ஏகாதசி போல, சிவபெருமானுக்கு சிவராத்திரி வரும். சிவனை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள்.
இந்த முறை, இன்று 15.10.2020 மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள்.சிவ சிந்தனையில் எல்லா காரியங்களையும் செய்யுங்கள். பதிகம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும்.
அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் சிறந்தது.
மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும் சிவனாரை தரிசனம் செய்வதும் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிப்பதும் ஈடில்லா பலன்களைத் தந்தருளும் என்பது திண்ணம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழியச் செய்வார் சிவபெருமான்.
ஓம் நமச்சிவாய !!!
By PlipPlipBlogs
Comments
Post a Comment