Know About Hindu Religion
இந்து சமயம்(மதம்)
இந்து மதம் ஒரு மதம் மட்டும் கிடையாது, அது ஒரு வாழ்வியல் வழிமுறை .
இந்து மதம் என்ன சொல்கிறது :
பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றின் முடிவற்ற சுழற்சியை தீர்க்கக்கூடிய விடுதலை மற்றும் மோட்ச்சத்தின் (மோட்சம் ) ஒரு நம்பிக்கை.பல கடவுள்களில் ஒரு நம்பிக்கை.இந்த தெய்வங்கள் உலகளாவிய மற்றும் இயற்கை செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.அனைத்து உயிரினங்களும் ஒரு குறுகிய காலத்திற்கு நேரடியாக உருவாக்கப்பட்டு பின்னர் இறக்கின்றன. மரண பயம் பெரும்பாலும் மனிதர்களிடையே உணரப்படுகிறது. இந்த பயம் செல்ல வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு குறித்த இந்த பயத்தை சுய அறிவு மட்டுமே அகற்ற முடியும்
இந்து சமயத்தில் முதன்மையானவை
- நான்கு வேதங்கள்
- உபநிடதங்கள்
- பிரம்ம சூத்திரம்
- பகவத் கீதை
- இதிகாசங்கள்
- பாகவதம்
- புராணங்கள்
- மனுதரும சாத்திரம்
- ஆமகங்கள்
இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.
மூன்று கோட்பாடுகள் :
அத்துவைதம் - பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று)
விசிட்டாத்துவைதம் - இறைவன் நமக்குள் ஒன்றியும், நம்மிடமிருந்து பிரிந்தும் இருக்கிறான்
துவைதம் - இறைவன் (பிரமம்) தனித்து இயக்குகிறான்.
இந்து சமயத்திற்கு ‘சனாதன தர்மம்’ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் ‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்று பொருள்.இந்து சமயத்தின் முக்கிய அம்சமே, அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான். அது மட்டுமின்றி எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பாகும்.
‘இறைவன் முன்பு நாம் அனைவரும் சமம்’ என்ற மிகப்பெரிய வாழ்வியல் நெறி அங்கு உணர்த்தப்படுகிறது. மேலும் வாழ்வில் எவ்வளவு துன்பம், துயரம், பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையையும் ‘நான் கும்பிடும் கடவுள் என்னை வழிநடத்துவார்’ என்று இறைவன் மேல் நம்பிக்கை வைத்து செயல் படுவது.
இந்து சமுதாயத்தில் திருவிழாக்கள், நிகழ்வுகள், மேளா அல்லது சந்தை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. எழுநூற்றுக்கும் மேற்பட்ட விரதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ஒருவர் கடைபிடித்தாக வேண்டும் என்ற விதியோ அல்லது கட்டாயமோ கிடையாது. ஒருவரால் என்ன முடியுமோ, அவனது நாட்டம் எப்படி உள்ளதோ, அதற்கு ஏற்றவாறு தனக்குத் தகுந்த விரதங்களை அவர் மேற்கொள்ளலாம். ஆனால் இதிலும் முக்கியமானது சமுதாயத்தில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தும் வளமாய் வாழ வேண்டும்.
இந்து மதத்தை பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பதிவில் காண்போம்
Comments
Post a Comment