ஆரோக்கியமாய் வாழ டிப்ஸ்

ஆரோக்கியமாய் வாழ டிப்ஸ் 



வணக்கம் நண்பர்களே, நலமாய் வாழ என்னெனலாம் பண்ணனும் எப்படி ஆரோக்கியமா இருக்கணும்னு இப்போ பாப்போம். இதை கட்டாயம் கடை பிடிங்க 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


1. நான்கு மணிக்கு ஒரு தடவை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும். 

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும் 

6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். 

ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும், சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள். கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம், குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். 

மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள். மது, புகை கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

Punjab & Punjabis - பஞ்சாப் மற்றும் பஞ்சாபிகள்

Bhagwan Shri Krishna - பகவான் கிருஷ்ணர்

The Amazon Forest - South America