பணக்குறை தீர்ந்து செல்வம் பெறுக செய்ய வேண்டியவை

செல்வம் பெறுக செய்ய வேண்டியவை 




இறைவன் அருள் இருக்கும் வீட்டில் நிச்சயம் பணத்திற்கான குறை என்றும் இருக்காது.அந்த வீட்டில் லட்சுமி வாசம் வாசம் செய்வாள். லட்சுமி விளக்கில் வசிக்கும் லட்சுமி தேவி உள்ள விளக்கை எத்தனை முகம் ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.

ஒருமுகம் உள்ள விளக்கை ஏற்றினால் மத்திம பலனை கொடுக்கும் . இரண்டு முகம் ஏற்றினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மூன்று முகம் ஏற்றினால் குழந்தை பேறு கிடைக்கும். நான்கு முகம் ஏற்றினால்  கால்நடைச் செல்வம் பெருகும். ஐந்துமுகம் ஏற்றினால் எட்டு வகையான செல்வச்செழிப்பும் வரும். 

வீட்டில் உள்ள லட்சுமி தேவி படத்திற்கும் பணப்பெட்டிக்கும் பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.மல்லிகை பூ வைப்பது சிறந்தது.செல்வ செழிப்பை மக்களுக்கு வழங்கும் அஷ்ட லட்சுமிகள், குபேரர்களை அன்றாடம் வணங்குவது நல்ல பலனைத்தரும். 

அஷ்ட லட்சுமிகள் 

ஆதிலட்சுமி
பிருகு முனிவரின் மகளாக அவதரித்த மஹாலக்ஷ்மி. 

தனலட்சுமி
செல்வதை வழங்கும் லட்சுமி. 

தானியலட்சுமி
வேளாண்மை வளம் பெருக்கும் லட்சுமி. 

கயலட்சுமி
கால்நடைகளின் லட்சுமி 

சந்தானலட்சுமி
புத்திர பாக்யத்தை அருள்பவள்.

வீரலட்சுமி
வீரம், வலிமை அருளுவாள்

விஜயலட்சுமி
எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள் விஜயலட்சுமி.

வித்யாலட்சுமி
அறிவையும் வல்லமையும் அருள்பவள்

இந்த அஷ்ட லக்ஷ்மிகளையும் வணங்கி வந்தால் எல்லாம் வளமும் நலமும் வாழ்வில் கிடைக்கும் .செல்வம் பெருகும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 


By PlipPlipBlogs

Comments

Popular posts from this blog

Punjab & Punjabis - பஞ்சாப் மற்றும் பஞ்சாபிகள்

Bhagwan Shri Krishna - பகவான் கிருஷ்ணர்

The Amazon Forest - South America