விநாயகர் வரலாறு
விநாயகர் வரலாறு :
வினைகளை தீர்ப்பவர் விநாயகர். எந்த ஒரு வழிபாடும் விநாயரிடமிருந்தே தொடங்குகிறது . விநாயகரைத் தொழுது தொடங்கும் காரியங்கள் வெற்றியாகும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட விநாயகரைத் தொழ பெரும் சிரமப் படவும் தேவையிருக்காது. மண்ணிலோ மஞ்சளிலோ பிடித்து வைத்தாலே விநாயகர் அதில் ஆவாஹனம் ஆகிவிடுவார். அவருக்கு எருக்கம்பூ மாலையே போதுமானது. பெரிய ஆலயங்கள் கோபுரங்கள் தேவையில்லை. அரசமரத்தடியில் குளக்கரையில் அமர்ந்து அருள் புரிவார். மேலும் விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாள்களில்தான் அவரை வழிபடவேண்டும் என்பதும் அவசியமில்லை. ஒவ்வொருநாளுமே அவரை வழிபடுவதற்கு உகந்த நாள்தான். நாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்தக் கோயிலில் இருக்கும் விநாயகரை வழிபட்ட பிறகே மூலவரை வழிபடச் செல்லவேண்டும்.
புராணங்களில் கூறப்படும் விநாயகர் வரலாறு :
பார்வதி குளிக்க செல்லும் முன் தன் உடல் அழுக்கையெல்லாம் ஒன்று திரட்டி பிள்ளையாரை செய்து காவலுக்கு நிறுத்தி வைத்துவிட்டு குளிக்க சென்றதாகவும் அப்போது சிவன் உள்ளே வர பிள்ளையார் அவரை மறிக்க சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி வீழ்த்துகிறார்.
நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு கோபமும், ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக மாறி உருவம் எடுத்து வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.
காளியைச் சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.
அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
இதுவே பிள்ளையாரின் அவதார கதையாகும். இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்று முதல் அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.
விநாயகரின் அருள் அனைருக்கும் கிட்டட்டும் !
வினை தீர்ப்பான் விநாயகன் !
விக்கினங்களை நீக்குபவன் !
ஓம் கணபதியே நமஹ
By PlipPlipBlogs
Super
ReplyDelete