Great Sikh Religion - சிறப்பு மிக்க சீக்கிய மதம்
சீக்கிய மதம்
சீக்கிய மதம் ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்வின் வழிமுறை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்,எப்படி நேர் வழியில் நடக்க வேண்டும், கடவுளை எப்படி வணங்கி அவனை தொழவேண்டும் என்று போதிக்கிறது.
இந்த மதம் முதலாம் சீக்கிய குரு , குரு நானக் தேவ் ஜி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. சீக்கிய மதத்தில் இன்று உலகளவில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். சீக்கிய மதம் எல்லா நேரங்களிலும் பக்தி மற்றும் கடவுளை நினைவுகூருதல், உண்மையுள்ள வாழ்க்கை, மனிதகுலத்தின் சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை போதிக்கிறது மற்றும் மூடநம்பிக்கைகளையும் குருட்டு சடங்குகளையும் கண்டிக்கிறது. சீக்கிய புனித நூல் மற்றும் வாழும் குரு என்று அழைக்க படும் , ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பில் பொறிக்கப்பட்டுள்ள 10 குருக்களின் போதனைகள் மூலம் சீக்கியம் இறைவனை அடைய வழி காட்டுகிறது
பஞ்சாபி மொழியில் 'சீக்கியர்' என்ற சொல்லுக்கு 'சீடர்' என்று பொருள் சீக்கியர்கள் பத்து சீக்கிய குருக்களின் எழுத்துக்களையும் போதனைகளையும் பின்பற்றும் கடவுளின் சீடர்கள். ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பில் இந்த போதனைகளின் ஞானம் அனைத்து மனிதகுலத்தையும் ஈர்க்கும் விதத்தில் நடைமுறை மற்றும் உலகளாவியது. அந்த எல்லாம் வல்ல ஏக இறைவன் அருளிய இறைச்செயதி ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பில் உள்ளது.
கடவுள் கோட்பாடு
- எல்லாம் வல்ல இறைவன் அவன் ஒருவனே
- அவனே உண்மையானவன் , அவன் எல்லா படைப்புகளிலும் உள்ளவன் , அவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன் மற்றும் சுயமாக உருவானவன் !
- உருவமற்றவன்
- அவனுக்கு நிகராக ஒன்றும் இல்லை
Comments
Post a Comment