சிவன் பற்றிய விளக்கம்
சிவபெருமான்
சிவன் உடலையும் உயிரையும் இயக்கத்தையும் குறிக்கிறது.இது சிவன் வாழ்க்கை சிவன் வாழ்க்கைக்கு ஆற்றல் சிவன் அனைத்தையும் உள்ளடக்கியது. உலகளாவிய ஆன்மா அல்லது நனவு என்ற ஆழமான புரிதலுக்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த சிவ தத்துவத்தை உணர்ந்துகொள்வது ஆனந்தம் அல்லது பேரின்பத்திற்கு வழிவகுக்கிறது.
சிவனின் விளக்கம் மூன்று நிலைகள் :
ஆதி - அந்தம் : தொடக்கம் மற்றும் முடிவு
சங்கோச்சா - விஸ்தாரம் : அணு முதல் அண்டம்
பிரசரணம் - அபிரசரணம் : பரவி கூடுதல்
சிவன் விளக்கத்தின் மூலம் :
" शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः "
விழித்திருத்தல், கனவு காண்பது மற்றும் தூங்குவது ஆகிய மூன்று நிலைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நிலை, அவை அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் சிவம் எது, அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்.எல்லா உயிர்களும் சிவமாகிய ஆரம்பத்திற்கே திரும்ப செல்கிறது.
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் உள்ளார். அருவுருவமாக லிங்க வடிவவுமும் , மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
இந்த வரிகள் மூலம் சிவன் அகில உலகத்துக்கும் இறைவன் அவன் முழுமுதற்க்கடவுள் என்பது திண்ணம்.
சிவன் காதல், அழித்தல் மற்றும் அருளலல் போன்றவற்றை செய்கிறார்.சைவ சித்தாந்தத்தின் படி சிவனே எல்லாவற்றிற்கும் ஆதி அந்தமாக இருக்கிறார்சிறிய அணு முதல் பேரண்டம் வரை அவர் இல்லாத இடமே இல்லை. இவர் பிறப்பும் இறப்பும் அற்றவர்.இவரே அண்ட சராசரங்களையும் அடக்கி ஒடுக்கி , அனைத்து உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், ஊழி காலத்தில் அவற்றை அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
திருவாசகத்தின் வரிகளை காண்போம் ,
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
ஈசன் அடியை பற்றியவர்க்கு என்றும் இன்பாதை அருளுபவர் பிறப்பறுக்கும் ஏகன் அனேகன் அவன் முடிவில்லாதாவன் , முற்றும் துறந்தவன். சிவபெமானை லிங்கவடிவில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஜோதி வடிவமே லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்திற்கும் ஆதாரமான சிவபெருமானை வழிபாட்டு சிவனுடன் ஒன்றிணைவோம்.
ஓம் நமசிவாய !!!
Comments
Post a Comment